கண்ணின் இமையானாய்

கண்ணின் இமையானாய்

0
26
EBOOK
Deebas

கண்ணின் இமையானாய் (தீபாஸ்)

அத்தியாயம் 01

காரில் தனது வீடு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த லூனா, கண்களை மூடி சாய்ந்திருந்தாள்.
அவள் மனதில், ‘அடுத்து என்ன பண்றது..?அப்பா கூப்பிடுறாருனு கம்பெனியில போய் உட்கார்ந்திடலாமா...?ம்… கூடும்… கொஞ்ச நாள் ஹாயா லைஃப்பை என்ஜாய் பண்ணனும்’
என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

‘காலேஜ் லைஃப்க்கு எண்டு கார்டு போட்டாச்சு… இனி ஹாஸ்டல் சாப்பாட்டுல நொந்து நூடுல்ஸ் ஆக வேணாம்… தனம்மாக்கிட்ட பிடிச்சதை எல்லாம் செய்து கொடுக்கச் சொல்லி ஒரு கட்டுக் கட்டலாம்…’எண்ணிக் கொண்டிருந்த போதே, கார் அந்த பிரமாண்டமான கேட்டுக்குள் நுழைந்து பங்களாவின் முன் வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கிய லூனாவை வாசலில் எதிர்பார்த்துக் காத்திருக்கவோ, வரவேற்கவோ உருத்தான ஆள் யாரும் இல்லை. அந்த எண்ணம் அவளுக்குச் சோர்வைத் தந்தது.

நின்ற காரிலிருந்து இறங்கியவள், சோம்பலை விரட்ட கைகள் இரண்டையும் மேலே தூக்கிப் பிடித்து உடலை முறித்துக் கொண்டாள். இளமையின் வளைவு நெளிவுகளை, அவள் உடுத்தியிருந்த பிளாக் டி-சர்ட்டும், பயணத்துக்குத் தோதாக அணிந்திருந்த ‘திரி ஃபோர்த் நைட் பேண்டும்’ வஞ்சகமின்றிக் காட்டிக் கொடுத்தன.

பங்களா வாசலில் விலை உயர்ந்த இன்னொரு கார் நிற்பதைக் கண்டு, யோசனையுடன்
“முருகன் அங்கிள், யார் வந்துருக்காங்க?” என்று டிரைவரிடம் கேட்டாள்.

“மேடம் வீட்டு ஆளு, ஒருத்தர் வந்திருக்கார் பாப்பா,” என்றார்.

அவன் சொன்ன ‘மேடம்’ அவளின் அப்பாவின் மனைவி அதாவது, லூனாவைவிட பத்து வயது மூத்த சித்தி.

பணக்காரப் பெண் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் ஷோபாவை, சித்தியாக அந்த வீட்டிற்கு, லூனா பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் தந்தை அழைத்து வந்திருந்தார்.

எம்.எல்.ஏ ஏகாம்பரத்தின் மகள் என்று சொல்லிக் கொள்ளும் ஷோபா, ஏகாம்பரத்தின் தொடர்பால் பிறந்தவள். நடிகை விசாந்தியின் மகள் என்ற அடையாளமும் அவளுக்கு இருந்தது.

பங்களாவின் கெஸ்ட் ரூமில் இருந்தவன், ஜன்னல் வழியாக வந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு நின்ற லூனாவை வெறித்துப் பார்த்தான். அவனின் கண்கள், நாகரிகமின்றி அவளின் மேனியில் அலைபாய்ந்தன.

ஹாலில் சோபாவில் அமர்ந்து, காலை டீபாயின் மீது வைத்து நகங்களுக்கு சாயம் பூசிக் கொண்டிருந்த ஷோபா, அவனின் பார்வை வெளியில் குத்திப் போவதைக் கண்டு,

“யாரை அப்படிப் பார்க்குற..? லூனா வந்துட்டாளா..?” என்றாள்.

“ம்… அவள் இப்போ வருவாள்’னு உனக்குத் தெரியு

...