
இரவி தீண்டா சேடல்!!
190
2.5k
EBOOK•
Completed#lovestory#rjtharanovels
About
இங்கு மரத்தடியில் அவனை அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்று தெரியாது! தங்களை தேடி வந்தவர்களின் சலசலப்பு அடங்கும் வரை அங்கிருந்து தலையைக்கூட நீட்டி பார்க்கவில்லை. ஆரண்யனோ இன்னும் தெளியாத மயக்கத்தில் அவள் அணைப்பில் இருந்தான். ஆரண்யன் உணர்ந்தது தனக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற அவளின் பயத்தையும், தன்னை தாங்கி இருக்கும் மார்பில் இருந்து வரும் அவளுக்கே உரித்தான அந்த பன்னீர் ரோஜா மணத்தையும் தான்…
“உங்களுக்கு ஒன்னும் ஆகவிடமாட்டேன் சார்” என்று அவள் வாய் முணுமுணுத்தது.
இரவி தீண்டா சேடல் இரவி - சூரியன் சேடல்- பவழமல்லி/பவளமல்லி சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் 99 வகை மலர்களில், 91 மலர் பவளமல்லி. இரவில் மட்டுமே பூக்கும் தன்மையுடையது. சூரியன் தீண்டாத பவளமல்லி கதையின் பெயர் பொருள். அத்தியாயம் 1 கலர் கலராக ஒளிரும் விளக்குகளும், மெல்லிய பின்னணி இசையோடு அந்த இடமே மின்னிக் கொண்டிருந்தது. கோப்பையில் விதவிதமான மதுபானங்களோடு மனிதர்கள் அங்கும் இங்கும் சுத்தி கொண்டிருக்க பார்த்தாலே தெரியும் அது பார்ட்டி நடக்கும் இடம் என்று, அதுவும் அங்கு வந்திருப்பவர்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap