Skip to content
வெள்ளிமலை தேவதையிவளோ

வெள்ளிமலை தேவதையிவளோ

39
225
EBOOK•
Completed#Loveatfirstsight#Romance

About

இரண்டு முறை மட்டுமே சென்றிருக்கும் பொம்மம்மா கோவில் இப்போதும் என் சிந்தை விட்டு அகலாத ஓர் ஆச்சர்யம். அகண்ட அந்த காட்டினையே கட்டிக் காக்கும் காவல் தேவதைதான் பொம்மம்மா. கோவிலுக்குப் போகும் பாதை ஆச்சர்யம் கலந்த பயத்தினை அள்ளித் தரும் என்பதில் எந்தவித சந்தேகமே வேண்டாம். யானை எல்லாம் உலவும் அந்த அடவி, நடுவே இருக்கும் கோவில், அங்கிருக்கும் ஆறு, வனச்சோதனைச் சாவடி, என என விரியும் இந்த பயணம் வெள்ளிமலை தேவதையிவளோ என்னும் கதையாய் உருமாறியிருக்கிறது.

அத்தியாயம் 01

நால்வர் கூட்டணி அது. பேசிக்கொண்டிருக்கையிலே ஒருவன் மட்டும் சிரித்து வைத்தான்.

"இப்போ எதுக்கு இளா இப்படி சிரிக்கிற?" கொஞ்சம் எரிச்சலுடனே கேட்டான் ரஞ்சித்.

"இல்லை.. இந்த காலத்துல போய்  இதையெல்லாம் நம்புறீங்களே? அதான் சிரிப்பு வந்துடுச்சு"

"நீ இந்த ஊருக்காரன் இல்லை. அதான் உனக்கு இங்க இருக்குற பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமா படுது. நம்பிக்கை இல்லாமல் பேசுற" ரஞ்சித் அந்த கிராமப்புறத்தின் நம்பிக்கைகளிலேயே ஊறி வளர்ந்திருந்ததால் சற்று கடுப்போடே சொல்லிவிட்டான்.

"எங்க இருந்தாலும் நான் இப்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap