
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே!!
0
126
EBOOK•
Completed#love #Romance #Tamilnovels #Tamilstories
About
வணக்கம் நண்பர்களே....
இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு அதிக வாசகர்களையும், வாசிப்புகளையும் பெற்றுத் தந்த கதை. நாயகி பிரார்த்தனா, நாயகன் அபிஷேக் முதல் சந்திப்பே மோதலில் முடிய,
வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கும் அவளோ அவனிடமே வேலைக்கு சேரும் நிலை ஏற்பட,
அதன் பிறகு என்ன ஆனது?அவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது?
இதற்கிடையில் மற்றொரு நாயகி அஞ்சலி மற்றும் தேவ் இவர்களின் பங்கு இதில் என்ன?என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறேன். படித்து உங்களுடைய கருத்துக்களை என்னோடு பகிரந்து கொள்ளுங்கள்
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
அத்தியாயம் 1
“விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞான முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…”
என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்த பாடல், அந்த விநாயகர் கோவிலையும் தாண்டி தெருவில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பாடலுக்கு இணையாக தன் குரலையும் இணைத்து விநாயகரின் சந்நதி முன்பு நின்று, மார்பின் குறுக்கே கைகளைக் குவித்தபடி பாடிக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
அவள் மனம் முழுக்க அப்பொழுது விநாயகர் மட்டுமே நிறைந்திருந்தார். அவரின் தீவிர பக்தை
...Loading...
Enjoyed this?
Sign in to clap