
தென்றல் தீண்டும் தாரகை
1
185
BLOG•
#Loveromance#Mithrayazhini#Antiheroine#Bestromance
About
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.
காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.
இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்? காதல், காமம், நகைச்சுவை, பிரிவு, வலி, துரோகம் என கலந்த நாவல் இது
அத்தியாயம் 01 ‘ஷாலிமார் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்’ என்ற பெயர் மின்ன, அந்த பிரம்மாண்ட ஹோட்டலின் போர்டிகாவில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து இறங்கினான் ஆரன். கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு நிற ஷர்ட் அவனுடைய கட்டுடலுக்கு பாந்தமாக பொருந்தியிருக்க, அந்த ஹோட்டலுக்குள் நுழையும் பெண்களை ஒரு முறை திரும்பி பார்க்கத்தான் வைத்தது அவனின் அழகு. ஆனால், எவரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஆரன். தலையை நிமிர்த்தி அந்த ஹோட்டலின் அலங்காரத்தையும் அழகையும் பார்த்தவனுக்கு அந்த நொடி வியப்பை கொடுக்கவில்லை. மாறாக, பயமுறுத்துவது...
Loading...
Enjoyed this?
Sign in to clap