Skip to content
இருளில் மிளிரும் அருவம்..!

இருளில் மிளிரும் அருவம்..!

95
817
SERIES•
Completed#love#family

About

மரணத்தை எதிர்பார்த்து யாரும் காத்திருப்பதில்லை. மரணமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எதிர்பாரா நொடியொன்றில் நிகழ்ந்துவிட்ட மரணத்திற்கு பிறகு... அடுத்து என்ன? திட்டமிட்ட கனவுகளும், தவறவிட்ட நொடிகளும், செய்து விட்ட தவறுகளும், கண் முன்னால் பூதகரமாய் எழுந்து மிரட்டினால், அடுத்து என்ன? ஆதித்தனுக்கும் அப்படி தான் நடக்கிறது. தவித்து நிற்கிறவனை, வாழ்க்கை அவனின் கைப்பிடித்து எங்கே அழைத்து செல்கிறது என தெரிந்துக் கொள்ள நாவலை படியுங்கள்...
அருவம் 1: அதிகாலையின் மெல்லிய இருளை போர்த்திக் கொண்டிருந்தது அந்த நகரம். தூரத்தில் சிறு வெள்ளை கோடாய் அலையடிக்கும் கடல். அதைத் தொட்டு விரிந்திருந்த கருநீல வானம். மின்மினியாய் அதில் படர்ந்திருந்த நட்சத்திர கூட்டம். நிறம் மங்கிய சித்திரமாய் ஒளிக் குன்றிய நிலவு, இன்னொரு பக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்க துடித்த ஆதவன் என சுற்றி இருந்த அத்தனையும் அந்த நிமிடம் அவளின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டது உண்மை. ஒற்றை கரத்தால் வாகனத்தை நேர்த்தியாய் இயக்கியபடியே, மற்றொரு கரத்தினால் அவள் பக்கமிருந்த கண்ணாடி சாளரத்தை...
Loading...

Enjoyed this?

Sign in to clap