
உனையன்றி வேறில்லை வெண்ணிலவே...!
11
1.1k
EBOOK•
Completed
About
வணக்கம் மக்களே..
நான் மேகலா பழனியப்பன். 2017ல் இந்த கதையை எழுத ஆரம்பித்தேன். என் முதல் கதை. என் முதல் புத்தகம். 2019 ல் முத்துலட்சுமி ராகவன் அக்கா கையால் என் முதல் புத்தகம் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி. காதலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால் எதற்காகவும் காதலை விட்டு கொடுக்க கூடாது. காதல் எத்தனை முக்கியமோ குடும்பமும் உறவுகளும் கூட முக்கியம். அந்த குடும்பத்தையும் உறவுகளையும் விட்டுக்கொடுக்காமல் வெற்றியும் , வெண்ணிலாவும் தங்கள் காதலில் எப்படி வென்றார்கள் என்று வாசித்து பாருங்கள்.
1
காலை கதிரவன் தன் இளங்கதிர்களை வானவீதி முழுவதுமாய் இறைத்து விட்டிருந்தான். தன்னவன் வருகையால் மஞ்சளும், இளஞ்சிவப்புமாய் வர்ணம் பூசியிருந்த வானமகள் அவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் தகதகவென ஜொலித்தாள்.
கோடைவெயில் காலை நேரத்திலேயே சுள்ளென்று அடிக்க அதைக்கூட சுகமாக அனுபவித்தபடி பயணித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல் என்கிற வெற்றி.
"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க... பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க" என்று பேருந்தில் சூழ்நிலைக்கு தக்க பாடிக் கொண்டிருக்க அதை ரசித்தபடி ஜன்னலுக்கு வெளியே தெ
...Loading...
Enjoyed this?
Sign in to clap