
தினையோடு தேனாய் (Thinaiyodu Thenai)
111
799
EBOOK•
Completed#nandhinisugumaran#love#family#entertainment#drama#village story#Tamil novel#novel#audio novel#audio book#audio#ebook
About
தினையோடு தேனாய்..
நாயகன் - இளஞ்சேரல்
நாயகி - செந்தமிழ்
இது ஒரு கிராமத்து காதல் கதை. கறிக்கடை தொழில் செய்பவனிற்கும் அது பிடிக்காத அவனது மனைவிக்குமான உணர்வுப் போராட்டமே இக்கதை.
தினையோடு தேனாய்
நந்தினி சுகுமாரன்
COPYRIGH @ 2024 நந்தினி சுகுமாரன்.
1
"ஏய் இந்தாப்பா, ஈரல் இருக்கு.?" என்ற குரலில், கைப்பேசியில் வைத்திருந்த கவனத்தை, அவரிடம் திருப்பினான் குமார்.
"இல்லையே அண்ணே, வித்துப் போச்சே?"
"என்னப்பா.?" என அவர் நகர முற்பட, "அண்ணே எந்த ஊரு.?" என்ற படியே பக்கவாட்டில் இருந்து வந்தான் நெடியவன் ஒருவன்.
"மதுரைப்பா. இப்ப இருக்கிறது எடப்பட்டி!"
"அட! நம்ம ஊரு பக்கம் தான். ஆளு புதுசா இருக்கீங்களேனு பார்த்தேன்!"
"என்னோட மகனுக்கு இங்க முனிசிபாலிட்டில வேலை கிடைச்சிருக்கு. நேத்துதான் வந்தோம்!
...Loading...
Enjoyed this?
Sign in to clap