
உன் மோகனத்தில் மயங்குகிறேன் கண்ணா..!
42
719
SERIES•
Completed#கமலிநிரஞ்சன்#lovelife#lovewithcomedy#familylove
About
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மெதுவாக பிளாட்பாரத்தை விட்டு நகர ஆரம்பித்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த ஆதவிஶ்ரீ, தன் மணிவயிற்றின் மேல் கை வைத்து கண்களை மூடிக்கொண்டாள். ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசும் ஒலி அவளது நெஞ்சுக்குள் அடித்துக் கொண்டிருந்த குழப்பத்துக்கு இசையாய் மாறியது. ‘கேரளா… மீண்டும் அவன் மண்…’
என்ற எண்ணமே அவளது மூச்சை கனமாக்கியது.
“எக்ஸ்க்யூஸ் மீ…”
என்ற ஆண் குரல்.
அந்த குரல்…
ஆதவிஶ்ரீயின் கண்கள் தன்னிச்சையாகத் திறந்தது.
அவன்...
ருத்ரமோகன்!
காதல் கலந்த ஊடலுடன் நகரும் சுவாரஸ்யக்கதை.
அத்தியாயம் 1 ஹாஸ்பிடல் வளாகத்தில் தளர்ந்த நடையுடன் ஆதவிஶ்ரீ மேடிட்ட தனது வயிற்றினைத் தடவிக் கொண்டே, ஆறு மாத சிசுவின் பரிசோதனைகளை எல்லாம் முடித்து விட்டு நடந்து வரும்போது, அவளைப் போலவே சில மாதர்கள் பிறக்கப்போகும் தங்களின் மகவுக்காக பரிசோதனை செய்ய அங்குள்ள நாற்காலிகளில் அமர முடியாமல் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆதவிஶ்ரீயின் கண்ணில் பட்டதென்னவோ, அவர்களின் கைகளை நிறைத்திருந்த வண்ண வண்ண வளையல்கள் தான். மேனியை உறுத்தாத காட்டன் புடவையை அணிந்திருந்தவளுக்கு தன் கைகள் வெறுமையுடன் இருப்பதைக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap