
வேதனை தீருமோ வெண்பனியே..
1
300
EBOOK•
Completed
About
முன்ஜென்மத்தில் அவன் ஓர் இளவரசன். அவன் நேசம் கொண்டவளோ அவன் அரண்மனையின் பணியாள்.. அவள் நலன் கருதி இளரசியானவள் இடம்மாற்றி வளர்க்கப்பட்டாலும் தனக்கானவள் அவள் தானென அறியாமலேயே நேசம் கொள்கிறான். நேச உயிர்கள் சதியால் மாண்டு போக, மீண்டும் மறுபிறவி கொள்கையில் காதலோடு, பகையும் வந்து சேர்கிறது. பகையை அழித்து மீண்டும் இணைவார்களா? முழுவதும் தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே.
வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
வேதனை தீருமோ வெண்பனியே வெண்பனி -01 “மாம், என்னோட சாக்ஸ் எங்க?” என்று கேட்டான் ஐந்து வயது சிறுவன் ஒருவன். “அந்த கபோர்டுல தான் இருக்குது, தேடி எடுத்துக்கோ வீரா” என்றாள் அவனது தாய். “மாம்.. ஆல்ரெடி லேட், ஸ்கூல் வேன் வந்துட போகுது நீங்களே வந்து தேடி குடுங்க மாம்” “ப்ச்ச்.. இப்படி அடம் பிடிச்சா எப்படி வீரா, நான் பாப்பாவுக்கு தலை பின்னி விடுறேன்ல, நீயே தேடி எடுத்து போட்டுக்கோ, எனக்கும் டைம் ஆகுதுல்ல” என்றவாறு தன் மகளுக்கு தலை வாரி பின்னல் போட்டு கொண்டு இருந்தாள் அவள்.. “மாம்.. இது கொஞ்சம் கூட நல்லா...
Loading...
Enjoyed this?
Sign in to clap