Skip to content
அவள் என் அந்தாதி!

அவள் என் அந்தாதி!

24
479
SERIES
Completed#love#romance#bosslove#vibavisha#family#Fiction
Viba Visha
Viba Visha

About

மிகப்பெரிய தொழிலதிபர் ஆதிநாதன் திடீரென்று உடல்நலம் சரியில்லாது கோமாவில் ஆழ்ந்துவிட, அவரது மகன் மதுவனால், ஆதிநாதனைப் பார்த்துக்கொள்ள வரவழைக்கப்படுகிறாள் நர்ஸ் தேவதா! ஆனால் வந்தவள், காரணமே இல்லாமல் நோயாளி ஆதிநாதன் மீது பெரும் வெறுப்பு கொண்டிருக்கிறாள். கூடவே யாராலும் அடக்க முடியாத மதுவனை ஆட்டிப் படைக்கிறாள்! மதுவனின் இன்பமான வாழ்வு அந்தமானதற்கும், அதே அவன் வாழ்வு துளிர்ப்பதற்கும் காரணமான அந்த "அந்தாதி" யாராவள்?
அந்த அடர்ந்து விரிந்திருந்த காட்டுப்பாதைகளுக்கு இடையே அதி விரைவாக வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனை, மனதில் ஒருவிதக் கிலியுடனே பார்த்துக் கொண்டு உடன் வந்தாள் அவள். "இதுவரைக்கும் குட்டி குட்டியா நாலு மலை ஏறியாச்சு.. இன்னும் எத்தனை மலையேறுனா தான் இவன் வீடு வருமோ? ஏதோ தனி வீடு.. தனி வீடுன்னு சொன்னாங்க! நானும் ஊருக்கு ஒதுக்குப் புறமா ஏதோ ஒரு தனி வீடுன்னு நினச்சேன். ஆனா.. இது ஊருக்கு ஒதுக்குப்புறமாவா இருக்கு? இல்லயில்ல.. இது ஏதோ தன்னந்தனியா மலைக்குகைக்குள்ள இருக்கும் போலிருக்கே? நாம வேற இவன்கிட்ட...
Loading...

Enjoyed this?

Sign in to clap