Skip to content
விழிகளில் பேசு காதல் மொழி..!

விழிகளில் பேசு காதல் மொழி..!

21
278
EBOOK•
Completed#கமலிநிரஞ்சன்#lovestory#lovelife#familylove#comedy#revenge
கமலி
கமலி

About

காதல்...திருமணத்தில் விருப்பமில்லாத ஆதர்ஷினிக்கு தனது தாயின் கடந்த கால கசப்பான சம்பவங்களே காரணமாக இருக்க, அதை முழுவதிலும் மாற்றும் தருணங்களாக அடுத்தடுத்து நடந்த அதிரடி நிகழ்வுகள் அனைத்தும் நகைச்சுவையுடன் கூடிய ஊடலும் கூடலும் நிறைந்தேறியிருக்கிறது.

அத்தியாயம் 1

அன்று கல்லூரியின் இறுதி நாள்.

அன்றே கல்லூரியின் 51-வது ஆண்டு விழாவும் கூட. அதிகாலையில் மணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்ய தேவையான அத்தனையையும் தயார் செய்து விட்டு வாசலிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ஜானகியம்மாள்.

“மணி ஏழாகப்போகுது. இந்த ஆதர்ஷினிய இன்னும் காணோமே. ஊருலகத்துல இல்லாத வழக்கத்தையெல்லாம் நா பெத்து வச்சது எல்லாமே ஃபாலோ பண்ணுது. எல்லாம் என் தலையெழுத்து!” என சுவர் கடிகாரத்தை பார்த்த வண்ணம் ஐந்தரைக்கே ஜாகிங் சென்ற தன் மகள் வருகிறாளா என வாசலையே பார்த்துக் கொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap