
அனலவன் பனியவள்
26
643
SERIES•
Completed
About
ஊரே அஞ்சும் நெருப்பனவன் சிவருத்ராக்ஷன், அவனுக்குள் உறைந்த பனியவள் ஆர்த்தி!
பணத்திற்காக நடந்ததாக பேசப்பட்ட திருமணத்தின் பின்னே இருந்தது அவனது பத்தாண்டு காதல் தவம்.
அச்சத்தில் நடுங்கியவளை தன் அன்பெனும் அரவணைப்பால் கரைத்து மெல்ல வசப்படுத்தினான் சிவன்.
பொறுமையும் காதலும் வெல்ல, அனலவனின் மடியில் பனியவள் கரையும் சுகமான பயணம் இது.
முரண்பாடுகள் மறைந்து இல்லறம் சொர்க்கமாக மாறிய அழகிய காதல் சித்திரமே இக்கதை!
அனலவன் பனியவள்
பாரதி கண்ணன்
அத்தியாயம் 1
நான்மாடக்கூடலாம் சங்கம் வளர்த்த மதுரையின் பிரபல திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது பல கன்னிப் பெண்களின் கனவு நாயகன் என்றும் இளம் பிரபல தொழிலதிபர் என்றும் அழைக்கப்படும் சிவருத்ரக்ஷனின் திருமணம். தனது ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக மாற்றும் யுக்திகள் அறிந்தவன். ஆறடி உயரத்தில், ஆளை அசரடிக்கும் கம்பீரத்தில், பார்ப்போரின் கவனத்தை தன் மீதே நிலைத்திருக்க செய்யும் ராஜதோரணையில் இன்றும் என்றும் யுவராஜனாக திகழ்பவன் சிவருத்ரக்ஷன் மட்டுமே. பட
...Loading...
Enjoyed this?
Sign in to clap