
இளவேனில் அதிரல் (பாகம் 1) - Ilavenil Adhiral (Part 1)
151
1.0k
EBOOK•
Completed
About
இளவேனில் காலமான ஆடிமாதத்தில் மதுரை அழகர்கோவில் தேரோட்டத்திற்காக, தேனூரில் கூடும் மூன்று குடும்பங்கள்.
விருப்பமில்லாத திருமணம், மனதளவில் விலகி இருப்போர், விவாகரத்திற்குத் தயாராவோர் எனக் குடும்பத்திற்கு ஒன்றாய் மூன்று இணைகள்.
திருவிழா முடியும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மனமாற்றங்களே இக்கதை.
பேசித் தீராத பிரச்சனைகள் என்று ஏதும் உண்டோ? இவர்களும் தங்களது குழப்பங்களைப் பேசி தீர்க்க முயல்கின்றனர். முயற்சி ஈடேறியதா என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
இளவேனில் அதிரல் பாகம் 1 திருமணமும் வாழ்க்கையும் நந்தினி சுகுமாரன் பதிப்புரிமை @ 2023 நந்தினி சுகுமாரன். அத்தியாயம் 1 காலியான தேநீர் குவளையை வைத்துவிட்டு எழ, அவ்விடத்தில் மற்றொருவர் வந்து அமர்ந்தார். அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்த கள்ளழகர், தான் அருந்திவிட்டு வைத்திருந்த கோப்பையை எடுக்க, "இங்க கொடுங்க தாத்தா!” என்றான் கடையில் இருந்த சிறுவன். "அவங்கவங்க வேலய அவங்கவங்க தான் செய்யணும்! நானே பார்த்துக்கிறேன். நீ என்னடா இன்னும் ஸ்கூலுக்குக் கிளம்பாம, உன்னோட அப்பன்கூட இப்படிக் கடையில வேலைப்...
Loading...
Enjoyed this?
Sign in to clap