
கள்வனின் காதல் மலரவள் 🥺❤️🩹
21
24
SERIES•
Ongoing
About
நாயகி மலர்விழியை காதலித்து கொண்டிருக்கும் நாயகன் வருண்தேவ்… தனது அம்முவிடம் தனது காதலை சொல்ல இருக்கும் சமயத்தில் சிலரின் சூழ்ச்சியால் மலர்விழி, வருண்தேவ் இருவரின் வாழ்க்கையும் புரட்டி போடப்படுகிறது… இருவரின் வாழ்க்கையும் இரு வேறு திசையில் பிரிந்து செல்கிறது… அதன் பிறகு நாயகன் வருண்தேவ் மற்றும் நாயகி மலர்விழி இருவரும் சேர்ந்தார்களா அல்லது பிரிந்தே வாழ்ந்தார்களா.. என்று கதை நகர்வின் மூலம் தெரிந்து கொள்வதே இக்கதை…
இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம்… இயற்கை காற்று, சுற்றிலும் வயல் வெளிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், பறவைகளின் கீச் குரல் சங்கீதமாக ஒலித்து கொண்டிருந்தது… புல் வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள், வயலில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள், வயலுக்கு அருகே உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்.. ஊரே பச்சை பசேலனா காட்சி அளித்தது.. அக்கிராமம் இருக்கும் இடம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரான அல்லி கிராமம் (கற்பனை)... காலை பதினொன்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap