Skip to content
உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் - Uiyrkirenada Unthan Kaathalil

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் - Uiyrkirenada Unthan Kaathalil

70
955
EBOOK
Completed

About

வணக்கம் தோழமைகளே.. இரண்டாம் மனைவியா ஒருத்தரோட வாழ்க்கையில நுழையிற பெண், அந்த ஆணோட குடும்பத்தையும் குழந்தையையும் தன்னுடையதா ஏத்துக்கிட்டு வாழ்க்கையைத் துவங்குற மாதிரி.. ஒரு ஆண் ஏன் அப்படி செய்யக் கூடாதுனு எனக்குள்ள ஏற்பட்ட எண்ணம் தான் இந்தக் கதையுடைய கரு! என்னால முடிஞ்ச அளவுக்கு அதை நன்முறையில் எழுத்துக்கள் மூலமா உங்களுக்குக் கொடுத்திருக்கேன். வாசிச்சுப் பார்த்து உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க. என்றும் உங்கள்.. நந்தினி சுகுமாரன்.

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில்

நந்தினி சுகுமாரன்.

Copyright at @ 2020 by Nandhini Sugumaran

1

விழிகளில் நீர் சொட்ட தந்தையின் கையைப் பற்றி நின்றிருந்தாள் அவள். சில மாதங்களுக்கு முன் அவள் வாழ்ந்த இல்லத்திற்குள், காலடி எடுத்து வைக்கும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது சிறிது நேரத்திற்கு முன்னர்.

"அப்பா, வாங்க போகலாம்!"

"இல்லமா! சம்பந்தி வரட்டும் அவங்கட்ட ஒரு வார்த்தை.."

இடைமறித்தவள், "வேண்டாம்!"

"என்னமா..?" அவர் இயலாமையுடன் வினவ, "இங்க நிக்க நிக்க எனக்கு ரொம்ப அசிங்கமா தோணுதுப்பா. மத்தவங்க வேடிக்கைப் பார்க்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap