Skip to content
மோக விழிகளின் நேசங்கள்

மோக விழிகளின் நேசங்கள்

1
122
EBOOK
Completed
Bharathi Kannan
Bharathi Kannan

About

நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், விசாலாட்சியின் துடுக்குத்தனமான பேச்சால் ஆத்திரமடைந்த அனலரசு அவளைத் தூக்கிச் செல்கிறான். இந்த மோதலால் ஊர் பஞ்சாயத்து கூடி, தண்டனையாக அனலரசுவிற்கும் விசாலாட்சிக்கும் திருமணம் செய்து வைக்கிறது. விசாலாட்சியின் முன்னாள் மாப்பிள்ளை விக்ராந்த், அவளது தங்கை லட்சுமியை மணக்கிறான். துடுக்குத்தனமான நாயகியும், முரட்டுத்தனமான நாயகனும் இணைந்த இந்த வாழ்க்கையில், மோக விழிகளின் நேசம் வென்றதா?

மோக விழிகளின் நேசங்கள்

பாரதி கண்ணன்

அத்தியாயம் - 1


தாயே கருமாரி!

எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி!

துணை நீயே மகமாயி


பர்வதம் இல்லத்தில் அருகே இருந்த கருமாரியம்மன் கோவிலில் பாடிக் கொண்டிருந்தன பக்தி பாடல்கள்.


"ஆத்தா.. ஆத்தா.."


"ஏன்டி இப்புடி கத்துற? போற வீட்டுல பிள்ளையோட வளர்ப்ப பார்த்தியான்னு உன் மாமியாக்காரி என்னையில்ல கிழிப்பா."


"ஆமா.. ஆமா.. கிழிச்சுடுவாப் பாரு. நா யாரு தென்மதுரைக்காரியாக்கும் வகுந்துட மாட்டேன்."


"ஆனாலும் தங்கராசு மவளுக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுடி. இந்த சண்டிராணிய கட்டிகிட்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap