
தீரா வஞ்சம் தீர வாராயோ - Part 1
30
490
EBOOK•
Completed
About
அகரனின் சேட்டைகளில் ஆரம்பமாகும் கதையில் நகைச்சுவையின் பின்னும் சில உட்கருத்துகள்
இருக்கும். வேந்தனின் அவசரபுத்தி, வெண்பிறையின் கம்பீரம், சத்ரியனின் குறும்புத்தனம்,
அவணியாளின் வீரம், ருத்ராவின் வஞ்சம், ஆழிநாடனின் துரோகம், அகரனின் சிந்திக்க தூண்டும்
வினாக்கள், அதற்கு நாயகர்களின் அசட்டையான பதில்கள் என அவர்களின் உரையாடலில்
என்னுடைய கருத்துக் குவியல்கள் பொதிந்து கிடக்கிறது. நம் முன்னோர்களின் உணவு பழக்கம்,
போரில் வகுத்த வியூகங்கள், பெண்களின் வீரம், நாட்டின் வளங்கள், அணிந்து கொண்ட
ஆபரணங்கள்
1 ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் சுகந்தத்தை ரசித்துக்கொண்டிருந்தான் வளரி வேந்தன். அவன் ஒரு இயற்கையின் கலாரசிகன்... குமரியில் சூரியன் உதிக்கும் அழகு கண்டு ரசிக்க காத்துக் கிடந்தான்... கடற்கரை மணலில் கால் புதைத்தபடி அனுதினமும் சூரியன் உதிக்கும் காட்சியை கண்டாலும் அலுத்துப் போவதில்லை அவனுக்கு... தினமும் புதிதாய் பிறக்கும் சூரியதேவனுடன் இவனும் பிறப்பான்... அதன் செங்கதிர்களை பரப்பும் பொழுது இவனும் மகிழ்ச்சியில் திளைப்பான்... திடீரென்று வந்த பெரும் அலை அவன் காலுக்கு அடியில் ஒரு பொருளை கொண்டு சேர்க்கவே...
Loading...
Enjoyed this?
Sign in to clap