Skip to content
இதுவும் காதல்தானடி கண்ணே

இதுவும் காதல்தானடி கண்ணே

28
601
EBOOK
Completed#LOVE AND FAMILY

About

பெண் என்பவள் எப்போது ஒரு ஆணை சார்ந்தே இந்த சமூகத்தினரால் பார்க்கப் படுகிறாள். பெற்றவர்களோ கணவனோ சரியில்லை என்றால் அவள் படு திண்டாட்டம் தான். அதுவும் பெற்றவர்கள் தவறு செய்தால் அந்தப் பழி காலம் முழுவதும் கணவன் வீட்டாரால் குற்றமாகவே பார்க்கப் படும். ஹரிணி அப்படிபட்ட ஒரு பெண் தான். அவரது தந்தையின் தவறு அவளது வாழ்க்கையை எப்படி இழுத்து செல்கிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவும் காதல்தானடி கண்ணே அஜூத்யா காந்தன் அத்தியாயம் 1 சீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா பக்தவத்ஸலா கோவிந்தா பாகவத பிரிய கோவிந்தா.. பெருமாள் பாடலை பக்தி பரவசத்துடன் பெண் குரல் ஒலித்துக் கொண்டிருக்க, கூட்டம் சேர்வதற்காக, அந்த மினி பஸ்ஸை முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். ‘அத்தாளநல்லூர்’ என்று முன் பகுதியில் போர்டு இருக்க டிரைவர் பஸ்ஸின் முன்பக்கம் ஸ்டைலாக சாய்ந்து நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.. கண்டக்டரை காணவில்லை. பஸ்ஸில் ஏறி அமர்ந்த மக்கள் டிரைவர்...
Loading...

Enjoyed this?

Sign in to clap