
உனக்கிணை யாரோ..!
66
280
EBOOK•
Completed
About
உனக்கிணை யாரோ..! என்னுடைய இரண்டாவது கதை. 2019 ஆம் ஆண்டு புத்தகமாக வெளி வந்து வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்த கதை. மதுபாலாவும் யுவராஜும் நல்ல நண்பர்கள். யுவராஜ், மதுவின் மீது காதல் வயப்பட, மதுவின் 'பணக்கார கணவன்' என்ற கனவுக்குள் தான் வரமாட்டோம் என்று புரிந்து விலகி போகிறான். மதுவிற்கு ராஜசேகருடன் திருமணம் முடிய, அந்த திருமணம் நீடித்ததா? யுவராஜ் மீட்னும் வந்தானா என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உனக்கிணை யாரோ? ஹாசினி அத்தியாயம் 1 அந்தப் பெரிய வீட்டின் பிரம்மாண்டம் முதலில் கண்ணைக் கட்டியது மதுபாலாவிற்கு. சுற்றிலும் உறவு கூட்டங்கள் இருந்த போதும், அவள் மட்டும் தனியே இருப்பது போல் ஓர் உணர்வு தோன்றியது. அன்று காலை ஒரு சில மணி நேரம் முன்னர் தான் அவளுக்குத் திருமணம் முடிந்து இருந்தது. பிடிக்காத திருமணமா என்று கேட்டால் அதற்கு அவளிடம் பதில் இல்லை. அதற்காக விரும்பி மணந்தாளா? அதுவும் கேள்விக்குறி தான். ராஜசேகரன் அவளின் கணவன். அவன் தான் அந்த வீட்டிற்கும், அவளுக்குமான சம்மந்தம். அவனின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap