
கரம் பிடித்து காதல் கொண்டேனடி
32
661
SERIES•
Completed#antihero#bold heroine
About
யாரென்றே தெரியாத ஒருவளை கண்ட நாளே, வலுக்கட்டாயமாக கரம் பிடிக்கிறான் பிஸ்னஸ் உலகின் ஈவில் எனப்படும் தி கிரேட் விகான் ஆரூஷ்.
இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் தன் திருமண கனவுகளில் மிதந்திருந்த அன்பின் உருவான இஷிதா, அந்த முரடனின் செயலால் விருப்பமின்றி அவனுடன் மணம் முடிக்கிறாள்.
கண்டவுடன் நாயகியவளை ஈவில் நாயகன் கரம் பிடித்ததற்கு என்ன காரணம்?
ஒரே இரவில் வாழ்க்கையே தலைகீழாக மாறிய போது, அதனை ஏற்றுக்கொள்வாளா நாயகி?
திருமணத்திற்கு அவளை ஒப்புக்கொள்ள வைக்க நாயகன் செய்த கடுமையான செயல்தான் என்ன?
1.அன்பில் திளைத்த அவளும்! அன்பே அறியாத அவனும்! ஒரு மிகப்பெரிய பரந்து விரிந்த ஒரு கட்டிடம். அதன் நடுவே உள்ள பலகையில் 'இந்து அனாதை இல்லம்' என்று பெரியதாக எழுதப்பட்டிருந்தது. அங்கு சிறுவர், சிறுமியர் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு அழகிய அடர் நீல நிற இருசக்கர வாகனம் ஒன்று அந்த அனாதை இல்லத்தின் முன் வந்து நின்றது. அதிலிருந்து தனது தலைக்கவசத்தை கழற்றி தன் தோள் அளவு இருக்கும் கூந்தலை சிலுப்பியவாறு இறங்கினாள் ஒரு பெண். அவளைப் பார்த்ததும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap