
பிரிவரிதடி பனிமலரே! (Pirivaridhadi Panimalarey!)
24
166
EBOOK•
Completed#Novel#HilmaThawoos#Romanticnovel#student-proflove
About
அன்னை தந்தையின் அன்பை அறியாதவள், பாடம் புகட்ட வந்தவனின் நேசத்தில் மயங்கித் தியங்கியதைக் கூறும் இக்கதை,
‘‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே!" எனும் பழங்கவிக்கு அர்த்தம் கற்பிக்கும் விதமாய் எழுதப்பட்டதாகும்.
ஜோடியாய் புன்னகைத்துக் கொண்டிருந்த அன்னை - தந்தையின் புகைப்படத்துக்கு முன் விளக்கேற்றி வைத்து, கண் மூடிக் கரம் கூப்பினாள் பனிமலர்.
"வாழ்க்கை எந்தவித சுவாரஷ்யமும் இல்லாம ஏனோ தானோனு போயிட்டிருக்கும்மா. என்ன பண்ணுறேன், எதுக்காக வாழறேன்னு கூட தெரிய மாட்டேங்குது. என்னோட அதியன் நிஜமாவே தேவியைக் கலியாணம் பண்ணி இருப்பாரா.. மனசு படபடங்குது. அ.. அவரு இனி என்கிட்ட திரும்பி வரவே மாட்டாராம்மா?" என்று வேதனை தாளாது வாய் விட்டுக் கேட்டவளின் மூடிய இமை வழியே கண்ணீர் துளிகள் கோடாய் வழிந்தன.
மன அமைதிக்காக ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap