Skip to content
பேசு மனமே பேசு

பேசு மனமே பேசு

22
335
EBOOK
Completed#COLLEGE LOVE, FAMILY, ROMANCE

About

சங்கமித்ரா தன்னுடைய பத்தாவது வயதில் பெற்றோர்களை ஒரு விபத்தில் பரி கொடுத்து விட்டு, அப்பாவின் ஒன்று விட்ட அண்ணன் ஒருவரின் வீட்டில் அடைக்கலமாகிறாள். அங்கு தான் பள்ளி படிப்பை தொடருகிறாள். பெரியப்பாவின் மகள் வந்தனாவும் அவளும் ஒரே வகுப்புதான். ஆனால் வேறு பள்ளி வேறு விதமான் படிப்பு.. வீட்டில் பெரியம்மாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டே பள்ளிப் படிப்பில் நல்லா மதிப்பெண் பெற்று கல்லூரிக்கு செல்கிறாள்.. பெற்றோரின் அரவணைப்பும் கவனிப்பும் தேவைப்படும் வயதில் அது இல்லாமல் எப்படி தன்னை செதுக்கி கொள்கிறாள்?
பேசு மனமே பேசு அஜூத்யா காந்தன் அத்தியாயம் 1 சங்கமித்ரா அதிகாலைப் பறவைகளின் கீச் கீச் என்ற ஒலி கேட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். இரவு வெகு நேரம் கண் விழித்து படித்ததால் கண்கள் இரண்டும் தீயாய் எரிந்தது.. இன்னும் சற்று நேரம் படுத்துக் கொள்ளேன் என்று உடல் கெஞ்சிற்று.. மின்விசிறி சுற்றும் போதே கழுத்துக்கடியிலும், அக்குளிலும் சுரக்கும் வியர்வை இல்லாமல், மெல்லிய குளுமை உடல் எங்கும் பரவ அந்த சுகத்தை அனுபவிக்க மனம் விரும்பிற்று.. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து, சோம்பலை முறித்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap