
நேசபூக்கள் மீண்டும் மலருமா
20
235
EBOOK•
Completed
About
நேசப்பூக்கள் மீண்டும் மலருமா.....
முதல் மனைவியின் துரோகத்தால் பெண்களை வெறுக்கும் நாயகன்....கட்டிய கணவன் விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை ஏற்படுவதால் அவனிடமிருந்து தப்பி நாயகனை வந்தடையும் நாயகி...... இருவருக்குள்ளும் காதல் மலருமா...... கதையை படித்து தெரிந்துகொள்ள...... நேசப்பூக்கள் மீண்டும் மலருமா......
மலரும் 1
தொடு வானில் ஓர்….
நட்சத்திர உலாவில்..,
தினம் வந்து மீளும் இரவுக்கு முற்றுப்புள்ளியாய்...!
யாருக்கும் எட்டா கனியாய்
சிம்மாசனத்தில் அமர்ந்து !
பல ஆண்களின் கவிதை நாயகியாய்
வலம் வரும் நிலவு மகள்…
தனது பால் வெள்ளைக் ஒளிக்கீற்றுகளை
இருட் பெரு வானில் படர விட்டு…..
ஒளியைத் தர….!
கருவேலங்காடு கிராமம் நிலவு வெளிச்சத்தில் பகல் போல் காட்சியளிக்க.. கிராமத்தின் தெருவில், வரிசையாக சிறு சிறு குடிசைகள் இருந்தது.. ஒரு செங்கல் வீட்டை கூட காணவில்லை….கடைசியாக அங்கிருந்த ஒரு சிறிய குடிசை வீட்டில் தனது எட்டு மாத ஆண் கை
...Loading...
Enjoyed this?
Sign in to clap