
யுகம் கடந்த விதைகள்
21
88
SERIES•
CompletedNovella championship May 2026
About
வாழ்வியலின் உண்மை (Reality of Life)
இதுதான் இந்த கதையின் ஆணிவேர்...ஒரு ஆடம்பரமான நகரத்து இளைஞன் (விக்கி), வாழ்வின் எதார்த்தமான கிராமத்துச் சூழலில் இறங்கும்போது சந்திக்கும் சவால்கள் இதில் அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளன..
ஏசி அறையில் அமர்ந்து வீடியோ எடுப்பதை விட, சாணி அள்ளுவதும், ஏரி நடுவே இறங்கிப் புதையல் தேடுவதும் எவ்வளவு கடினமானது மற்றும் அவசியமானது என்கிற வாழ்வியல் உண்மையை காமெடி கலந்து காண்போம்....
யுகம் கடந்த விதைகள்.... விதை 1 2026-ன் கோடை காலம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போலப் பரபரப்பாக இருந்தது. ஆனால், விக்னேஷ்வரன் என்கிற விக்கிக்கு மட்டும் அந்த இடம் ஒரு போர்க்களம் போலத் தெரிந்தது. விக்கி சிறிது வருடத்திற்கு முன் தான் தனது அப்பா அம்மாவை இழந்திருந்தான்... சொந்தம் என சொல்லிக்கொள்ள பெரியப்பா, பெரியம்மா மட்டுமே கிராமத்தில் இருந்தார்கள். ஆள் பார்க்க நல்ல வெள்ளை நிறமும், வளர்ந்து சேவ் செய்யப்பட்ட தாடி மீசையும், ஜிம்மிற்கு சென்று உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மாடர்ன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap