Skip to content
இரவில் உதித்த சூரியன்

இரவில் உதித்த சூரியன்

10
166
SERIES
Completed

About

எழுத்தாளர் டெய்சி ஜோசப்ராஜால் புனையப்பட்ட 'இரவில் உதித்த சூரியன்' நாவலைப் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம் ஒற்றை வினாடியில் ஏற்பட்ட தவறான புரிதலால் தன் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தையே இழந்து, தன் வாழ்க்கையின் பல வசந்த காலங்களை தொலைத்த டாக்டர் பாலாஜி என்றாவது ஒருநாள் தன் காதல் மனைவி திவ்யா தன்னைச் சந்திக்க வருவாள் என்ற நம்பிக்கையோடு; தான் இழந்த தன் தேவதைக்காக 18 வருடங்கள் அவளின் மாளிகை வீட்டில் தன் மகளோடு காத்திருக்கிறார்.
அன்று இரவு இயற்கைக்கு ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை? இயற்கையின் அந்தக் கொடூரத் தாண்டவத்தில் பூமித்தாய் தத்தளித்துக் கொண்டிருந்தாள். சுழற்றி அடிக்கும் சூறாவளிக்காற்று; கொட்டிக் கவிழ்க்கும் மழை; இருளைக் கிழித்துச் செல்லும் மின்னல்; உலக உருண்டையையே அதன் பாதையிலிருந்து உருட்டித்தள்ளுவது போன்றதொரு இடி முழக்கம்…! அந்த இடி முழக்கத்தின் உறுமல் சப்தத்தில் விழிப்புத் தட்டி நடுங்கிப் போன சந்தியா ஓடி வந்து தன் தந்தையின் கழுத்தை இறுக்கிக்கட்டிக் கொண்டாள். இரண்டு கல்தூண்களுக்கிடையில் அமர்ந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap