
ம்ருத்யுவனம்
24
186
EBOOK•
Completed#ம்ருத்யுவனம்#ம்ருத்யு#horror#mystery#thriller#Durga#Chidambaram#mrthyuvanam#mrthyu#magendran#pavi#bavani
About
மண்மணம் கமகமக்க ஒரு கிராமிய மர்மக்கதை. தமிழ்நாட்டின் பொதிகை மலையிலிருக்கும் கிராமத்தை ஒட்டிய ஒரு காட்டுப் பகுதி. அங்கே மர்மமான முறையில் தொடர் மரணங்கள் நிகழ்கின்றன. நாயகனும் நாயகியும் அதை ஆராய முற்பட, பல மர்மங்களும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வருகின்றன. அத்தியாயத்திற்கு அத்தியாயம் மர்ம முடிச்சுகளையும், திருப்பங்களையும் கொண்ட இந்த ம்ருத்யுவனம், கடவுளின் கோட்டையா? மனிதனின் மர்மக் களஞ்சியமா? அமானுஷ்யத்தின் அரங்கமா?
ம்ருத்யுவனம்
மரணம் 1
இரவு ஒன்பது மணி. அந்தப் பகுதியின் அமைதி திரையைக் கிழித்துக் கொண்டு,
"நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை..."
- என்ற பழைய பாடல், ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் போனிலிருந்து சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த சத்தம் வந்த இடம், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இருந்த, முற்றிலும் மரங்களால் செய்யப்பட்ட இரு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட வீடு.
சுற்றியும் கண்ணுக்கு எட்டும் தூரமும், எட்டாத தூரமும் கூட காடு, அடர
...Loading...
Enjoyed this?
Sign in to clap