Skip to content
எனை ஆளும் மெல்லிசையே

எனை ஆளும் மெல்லிசையே

46
445
SERIES•
Completed#novel#feelgoodstory#tamilthiyagarajan#tamilnovel#familystory#love_story

About

ஒருவரை ஒருவர் மனதார விரும்பும் நாயகன் நாயகி... ஆனால் இருவர் மனதிலும் தவறான சில புரிதல்களால் தங்கள் காதலை தங்களுக்குள்ளே புதைத்துக் கொள்கின்றனர்... இவர்களுக்குள் வரும் குழப்பங்கள் தீர்ந்து எப்படி சேர்ந்தார்கள்... நாயகனின் உரிமை போராட்டம், நாயகனை மனதில் நிறைத்து அதை தடுக்க துடிக்கும் நாயகியின் தவிப்பு,  உறவு சிக்கல்களின் கலவையாக,  பல அழகிய உறவுகளின் சங்கமமாக‌ மனதை மகிழ்விக்கும் ஃபீல் குட் ஸ்டோரி....
அத்தியாயம் 1 கண்ணுக்கெட்டிய தூரம் வரை காதல் கொண்ட மங்கையாக கதிரவனைக் கண்டு நிற்கும் சூரியகாந்தி பூக்கள் மஞ்சள் வண்ண நட்சத்திரங்களாக செழித்து நின்றது.... தோட்டத்து வரப்புகளுக்கு இடையே சலசலக்கும் அந்த சிறிய நீரோடையில் கதிரவனின் வெண் கதிர்கள் பட்டு வைரத் துளிகளாக பிரதிபலித்தது.... "டிங்ங்ங்ங்ங்....... டிங்ங்ங்ங்ங்...... டிங்ங்ங்ங்ங்......" சற்று தள்ளியிருந்த கோவிலின் மணியோசை செவிகளில் சங்கீதமாக ஒலித்தது.... கொலுசு முத்துக்கள் சப்தமிட தண்ணீரில் காலை நனைத்து ஆட்டியபடி சிறிய பாறைக் கல்லில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap