Skip to content
சிறகுகள் முளைத்த சித்திரமே

சிறகுகள் முளைத்த சித்திரமே

746
4.2k
SERIES
CompletedNovella championship May 2026#Novella Championship May2026#novella Championship May 2026
Surya Saravanan
Surya Saravanan

About

சிறகுகள் முளைத்த சித்திரமே Papr.space குறுநாவல் பிரீமியம் போட்டிகான எனது படைப்பு "உதாசீனப்படுத்திய உறவுகளுக்கு நடுவே... ஒரு பெண்ணின் எழுச்சிப் பயணம்!" கடந்த கால கசப்பான அனுபவங்களால், திருமணமே வேண்டாம் என்று வைராக்கியத்தோடு இருக்கும் நாயகன் சக்திவேல். அவனைப் போராடி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கத் துடிக்கும் குடும்பத்தார். போராட்டத்தின் இறுதியில், நாயகன் திருமணத்திற்குச் சம்மதித்தானா? தன் மனதில் ஒருவனை ஆழமாகப் பதித்து வைத்து, அவனையே தன் தெய்வமாக பூஜித்துக் கொண்டிருக்கும் நாயகி தேன்மொழி.
அத்தியாயம் 1 பூஞ்சோலை கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமசாமியின் மாடி வீட்டின் முன்னே, தென்னங்குருத்துகளால் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்த ஊரில் ஓரளவு வசதி படைத்த, மரியாதைக்குரிய குடும்பம் ராமசாமியுடையது. தன் மூத்த மகள் தேன்மொழியின் பூப்பு நீராட்டு விழாவிற்காக, மரகதம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் மிக விமரிசையாக ஏற்பாடுகளை செய்திருந்தார். வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி, வீட்டை அரண்மனை போல் மாற்றியிருந்தார் மரகதம். அடுக்களையில் கொதிக்கும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap