
வாயாடன் (காதல் முதல் கல்யாணம் வரை))
2
38
SERIES•
CompletedNovella championship May 2026#காதல் முதல் கல்யாணம் வரை#காதல்#லவ்#ரொமாண்டிக்#ரொமான்ஸ்#வாயாடன்#OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR
About
வாயாடன் தொடர்கதையின் முதல் பகுதி, "காதல் முதல் கல்யாணம் வரை". இந்த மில்லினியத்தின் தொடக்க ஆண்டுகளில் நடக்கும் சுவாரசியமான சஸ்பென்ஸ் ரொமாண்டிக் கதை..
பகுதி: 01 "நோக்கிய அண்ணலை அவளும் நோக்கினாள்!" பிரேம்... முதல் டிகிரியும், முதல் காதலும் வாங்கும் கனவுடன் கல்லூரியில் காலடி வைக்கப் போவதையெண்ணி விடிய விடிய கனவு கண்டுவிட்டு, விடிந்தபின்பும் தூங்கிக்கொண்டிருந்தான்! "டேய்.. பிரேம்... வெயில் அடிக்குறது கூடவா ஒரைக்கல..?! எழுந்திருடா எரும.." மொட்டைமாடியில் தூங்கிக்கொண்டிருந்தவனை, கொடியில் துணி உலர்த்திக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு கீர்த்தனா தண்ணீர் தெளித்து எழுப்ப, அதிர்ந்து எழுந்த பிரேம், அவசர அவசரமாகக் குளித்து முடித்து பைக்கைக் கிளப்பினான்.....
Loading...
Enjoyed this?
Sign in to clap