
பெண்ணெனும் அவள் : Pennenum Aval
0
76
EBOOK•
CompletedNovella championship May 2026#NovellaChampionship2026 #sushasureshnovels #family #novel #story #tamilnovel #tamil #drama #familydrama #familynovel #womenempowerment #women #பெண்கள் #சமூகநாவல் #சுதாசுரேஷ்
About
இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்குத் தான் எத்தனை பெயர்கள்? இதில் நம் கதையின் நாயகிக்கு கிடைக்கும் பெயர் என்ன? என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள் பெண்ணெனும் அவள்? எப்படிப்பட்ட விஷம் தோய்ந்த பேச்சுகளை எதிர்கொள்கிறாள் பெண்ணவள்? இறுதியில் அதற்கெல்லாம் சேர்த்து அவள் இந்த சமுதாயத்திற்குத் தரும் பதிலடி என்ன? சமுதாயத்தில் சில இடங்களில் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. கதையோடு பயணிக்கலாம் வாருங்கள்.
பெண்ணெனும் அவள்
அத்தியாயம் -1
நேரம் காலை எட்டு மணி. வேலைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஜுவாலா.
இருபது நாட்களுக்குப் பிறகு அன்று தான் வேலைக்குச் செல்ல இருக்கிறாள்.
பீரோவைத் திறந்து, தன் கணவன் பத்ரிக்கு மிகவும் பிடித்தமான அந்த காட்டன் புடவையை வெளியே எடுத்தாள்.
ஜோதிகா ரோஸ் நிறத்தில் உடலும், ஆங்காங்கே கொஞ்சம் இள வயலட் நிறத்தில் புட்டாவும், அதே இள வயலட் நிற பார்டரும் என்று அவ்வளவு அழகாக இருந்தது அந்தப் புடவை.
உடுத்திக் கொண்டு கண்ணாடி முன் சென்று நின்றாள். மிகவும் பாந்தமாக இருந்தது அவளுக
...Loading...
Enjoyed this?
Sign in to clap