Skip to content
விதி சூட்டிய திலகம்

விதி சூட்டிய திலகம்

24
1.0k
SERIES•
Completed
Anu Vigneshwari
Anu Vigneshwari

About

"தம்பி... இது சாதாரணக் குங்குமம் இல்ல. ருத்ரபுரத்துல எந்த ஆண் ஒரு பெண்ணோட நெத்தியில குங்குமம் வைக்கிறானோ, அவனே அவளுக்குப் புருஷன்னு அர்த்தம். சாமி சாட்சியா உங்களுக்கு கல்யாணம் நடந்துருச்சு தம்பி!" அசோக்கின் தலை சுற்றியது. "என்னது? புருஷனா? என்னங்க காமெடி பண்றீங்க? நான் ஏதோ அந்த அர்ச்சகர் அவசரப்படுறாரேன்னு ஹெல்ப் பண்ண வந்தேன். இதுக்கெல்லாம் போய் கல்யாணம்னு சொன்னா எவன் நம்புவான்?" "இப்போ கன்னிகா உன்னோட மனைவி தான். அவளை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இல்லன்னா, ஒரு அந்நியன் தொட்ட பொண்ணை...

ருத்ரபுரம். பெயரிலேயே ஒரு உக்கிரம் தகிக்கும் அந்த ஊர், விடியற்காலையின் பனிப்புகாரில் ஒரு பழங்காலத்துச் சிறைச்சாலையைப் போலக் காட்சியளித்தது. அதிகாலை ஐந்து மணிக்கே அந்த ஊர் விழித்துக்கொண்டாலும், அந்த விழிப்புணர்வில் ஒருவிதமான இறுக்கமே குடி கொண்டிருந்தது. தெருக்களில் மிதிப்பவர்களின் பாதங்கள் கூட சத்தம் எழுப்ப அஞ்சின. இடுப்பில் கனத்த செம்பு மற்றும் பிளாஸ்டிக் குடங்களைச் சுமந்தபடி, பெண்கள் நிழல்களைப் போல நகர்ந்து கொண்டிருந்தனர். எவர் கண்ணும் தரைப்பாவத்தை விட்டு அகலவில்லை. அங்கே மௌனம் என்பது ஒரு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap