Skip to content
அகலில் அமிழ்ந்த ஆன்மா

அகலில் அமிழ்ந்த ஆன்மா

1
171
EBOOK
Completed#family#ghost

About

ஆலமரத்தினுள் அடைபட்டிருக்கும் ஆன்மா விடுதலையாகும் சமயம் உண்டாகும் மாற்றங்கள் கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் பாதிப்பினை உருவாக்குமா? என்பதே இந்தக் கதை.

அகலில் அமிழ்ந்த ஆன்மா – பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்

அத்தியாயம் 1

அடியேய் அருந்ததி என்று கைப்பேசியின் திரையில் கதறிக் கொண்டிருந்தான் பசுபதி. அந்த சத்தத்தில் அதிர்ந்து கைப்பேசியையே இறுக்கமாகப் பிடித்தபடி பயத்தோடும் ஆச்சர்யத்தோடும் அருந்ததி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

அறைக்குள் மின்விசிறி கடகடவென சுற்றிக் கொண்டிருந்த சத்தத்தோடு அந்த படத்தின் சத்தமும் சேர்ந்திருந்தது.

அறையின் ஒரு மூலையில் சிறிய மின்விளக்கு ஒன்று மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அது கூட அவள் பயம் அதிகமாக இருந்த கார

...
Loading...

Enjoyed this?

Sign in to clap