Skip to content
சிதைந்த கற்களும் சில இதயங்களும்

சிதைந்த கற்களும் சில இதயங்களும்

0
24
SERIES•
Ongoing#anuvigneshwari#romance
Anu Vigneshwari
Anu Vigneshwari

About

"போகாத நிலன்! அங்க போறது ஆபத்து! வேணாம்டா...!" அவள் தன் குரலின் முழு பலத்தையும் திரட்டிக் கெஞ்சினாள். அவன் சட்டையைப் பின்னால் இருந்து இறுகப் பிடித்து இழுத்தாள். அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. "விடு... கையை விடு!" என்று உறுமிவிட்டு அந்த நச்சுப் புகைக் கூட்டத்திற்குள் பாய்ந்து மறைந்தான். அதே நேரம், இன்னொருவன் மின்னல் வேகத்தில் செயல்பட்டுப் பயர் சர்வீஸை அழைத்தான். "ஹலோ! சார், சீக்கிரம் வாங்க! நிலன் அப்பார்ட்மெண்ட் இடிஞ்சு விழுந்துடுச்சு! உள்ள நிறைய பேர் சிக்கியிருக்காங்க!"
அந்தப் புகைக்குள்ள அவன் ஓடி மறைஞ்ச அந்த ஒரு செகண்ட்ல, என் உசிரே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு. இத்தனை வருஷமா மனசுக்குள்ளயே பூட்டி வெச்சிருந்த அந்த ஒரு ரகசியம், இன்னைக்கு இப்படி ஒரு சூழ்நிலைக்கு நடுவுல வெடிச்சு வெளிய வரும்னு நான் கொஞ்சமும் நினைக்கல. நான் கத்துற சத்தம் அவன் காதுல விழுந்திருக்குமா? இல்ல, அந்த இடிபாடுகளோட சத்தத்துல கரைஞ்சு போயிருக்குமா? "திரும்பி வந்துடு... ப்ளீஸ்!" - என் தொண்டை குழறிச்சு. ஆனா அவன் ஒருவாட்டி கூடத் திரும்பிப் பார்க்கல. ஒருவேளை... அவன் அங்கிருந்து திரும்பி வரலனா?...
Loading...

Enjoyed this?

Sign in to clap