Skip to content
ஏரிக்கரை

ஏரிக்கரை

21
31
EBOOK•
Completed
ஜி.கே
ஜி.கே

About

தற்கொலையா..இல்லை கொலையா?” - மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் பரபரப்பும் பதட்டமும் நிறைந்த க்ரைம் திரில்லர் கதை.

இறைவன் படைத்ததில் இயல்பு கெடாமல் தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு…

(யாரோ )

ஏரிக்கரை 1 :

விடியற்காலை ஐந்து மணி,

இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளின் சாட்சியாய் ஆதவன் கிழக்கே உதிக்க ஆரம்பித்தான். அது சென்னை மாநகரத்தின் ஏதோ ஓர் இடம், ஏரி அல்ல குளத்தின் தயவால் குளுமையான காற்று உடலை தழுவி செல்கையில், காற்றின் குளுமையை அனுபவிக்க தடையாய் காற்றோடு கலந்து வந்தது துர்நாற்றம் .

ஆதவனின் உதயத்தை பூமியே அமைதியாய் உள்வாங்க, அதற்கு நேர்மாறாய் அந்த இடத்தில் மட்டும் புள்ளினங்களின் அளப்பரிய சத்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap