Skip to content
சூது கவ்வும்

சூது கவ்வும்

0
30
BLOG

About

சமூகத்தில் அந்தஸ்து மிக்க ஒருவரின் இல்லத்திற்குள் நுழையும் மங்களம் மாமி என்ற சமையல்காரி உண்மையில் யார்? அவள் ஏன் அந்த இல்லத்திற்கு சமையல்காரியாக வருகிறாள்? தன்னுடைய திட்டத்தில் அவள் வென்றாளா இல்லையா என்பதே இந்தக் கதை. ஒரு சக்திவாய்ந்த குற்றவாளியின் அதிகாரத்தை சட்டப்பூர்வமாகத் தகர்ப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து நீதிக்காகப் போராடும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை இந்தக் கதை சித்தரிக்கிறது.

சூது கவ்வும்

(புதினம்)

அன்னபூரணி தண்டபாணி

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்”

- பாரதியார்

1.

அந்தப் பெரிய கேட்டை திறந்து கொண்டு மங்களம் மாமி மெதுவாக நடந்து உள்ளே வந்தாள். அவளைப் பார்த்து, 

"யாருங்க என்ன வேணும்?" என்று ஒரு ஆள் கேட்க,

"சமையல் வேலைக்கு பெண் வேணும்னு விளம்பரம் கொடுத்திருக்கா.. அதான் விவரம் கேட்டுண்டு போலாம்னு வந்தேன்.." என்றாள் மாமி.

"ஓ.. சமையல் வேலைக்கா.. இருங்க அம்மா கிட்ட சொல்றேன்.. வருவாங்க.. இப்படி நில்லுங்க.." என்று கூறிவிட்டு அந்த ஆள் உள்ளே ஓடினான். சில நிமிட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap