Skip to content
தொலைந்தேன் என் ஆழியில்

தொலைந்தேன் என் ஆழியில்

21
562
EBOOK
Completed#Romantic

About

இதுவரை திருமணமே செய்து கொள்ளாத நாயகன், இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட பெண்ணை திருமணம் செய்கிறான். அவனுக்கும் இது முதல் திருமணமாகவும், அவளுக்கு இது மூன்றாம் திருமணமாகவும் நடைபெற்றது.ஏன் ? கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
தொலைத்தேன் என் ஆழியில் ஆழி -1 விடிந்தும் விடியாத காலை பொழுது அது. கருநீல மேகங்கள் மெல்ல விலகி, சூரிய தேவனின் தரிசனத்திற்கு வழி விட்டு ஒதுங்கி நின்ற காட்சியை பார்க்க தான் அங்கு யாரும் இல்லை. அதை விட பெரிய காட்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. இராமநாதபுரம் மாவட்டம். முதல் முதலில் சிவபெருமானின் ஸ்தலம் தோன்றிய புண்ணிய பூமி என நம்பப்படும் புண்ணிய ஸ்தலம் அந்த மாவட்டத்தில் உள்ளது. அது தான் உத்தர கோச மங்கை ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap