Skip to content
ஆதியோ அகதியோ அழகியே நீ யார்

ஆதியோ அகதியோ அழகியே நீ யார்

20
244
EBOOK
Completed
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

ஒரு விபத்தால் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் ஆரம்பித்த ஜனமேஜெயன் பர்வதவர்த்தினி இருவருக்கும் இடையே ஏற்படும் அறிமுகம் எங்கு சென்று நிறைவு பெற்றது என்று சொல்வது தான் இந்தக் கதையின் கரு.
ஆதியோ அகதியோ அழகியே நீயார் வைஷு அய்யம் 1 குன்னூர் நகரின் அரசு லாலி மருத்துவமனை அந்த மாலை நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்தரை மணியளவிலேயே கார்மேகங்கள் சூழ்ந்த வானம் சற்று இருட்டி மிரட்டிக் கொண்டிருந்தது. மருத்துவமனை மலைவாச ஸ்தலத்தில் அமைந்திருந்தால் ஒரு ஏற்றத்தில் ஏறித் தான் பின்னர் அதன் நுழைவாயிலை அடைய முடியும். அந்த ஏற்றத்தின் வழி மருத்துவமனைக்கு செல்லும் சுவரெல்லாம் பாசி படிந்து, சிறிய செடிகளால் மண்டிக் கிடந்தது. அரசு லாலி மருத்துவமனை குன்னூர் நூற்றாண்டு வளைவு என்ற...
Loading...

Enjoyed this?

Sign in to clap