Skip to content
நட்புன்னா என்ன சும்மாவா!! : Natpunna Enna Chummavaa!!

நட்புன்னா என்ன சும்மாவா!! : Natpunna Enna Chummavaa!!

0
17
EBOOK
Completed#sudhasureshnovels #familynovel #family #frienshipnovel #friendship #friends #tamilnovels #novel #stories #love #tamilaudionovel #tamil #college #collegestory #storytelling #சுதா_சுரேஷ் #தமிழ்நாவல் #collegefriends
Sudha Suresh
Sudha Suresh

About

'நட்புன்னா என்ன சும்மாவா!!' என்னும் இந்தக் கதை, தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கத்தால் 'எழுத்தாணி' விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது நட்பைப் பற்றிய நண்பர்களைப் பற்றிய கதை. கல்லூரியில் ஒரு பத்து பேர் கொண்ட குழு, படிப்பு முடிந்து பிரியும் போது, இருபது வருடங்கள் கழித்து சந்திப்பது என்று பேசிக்கொண்டு பிரிகின்றனர். பேசியது போல் சந்தித்தனரா நண்பர்கள்? ஒவ்வொருவரின் நிலையும் என்ன அப்போது? அதன் பிறகு அவர்களுடைய நட்பு தொடர்ந்ததா? கதையோடு பயணிக்கலாம் வாருங்கள்!
நட்புன்னா என்ன சும்மாவா!! அத்தியாயம் - 1 அந்த ஆளுயரக் கண்ணாடியில் மற்றும் ஒரு முறை தன்னை முழுமையாக பார்த்துக் கொண்டாள் தாரிகா. நல்ல வட்ட வடிவ முகம். சிவந்த நிறம். மையிட்ட பெரிய துடிப்பான கண்கள். ரோஜாப்பூ போன்ற உதடுகள். கொஞ்சம் உப்பிய அழகான கன்னங்கள். லைட் பிஸ்தா கலரில் ஜரிகையுடன் கூடிய பிரவுன் கலர் பார்டரில் அமைந்திருந்த அந்தக் காட்டன் சேலையில் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைப் போல், பார்ப்பவரை பிரம்மிக்க வைக்கும் அழகுடன், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் லட்சணமாய் காட்சி அளித்தாள் தாரிகா....
Loading...

Enjoyed this?

Sign in to clap