
சேக்காளி
0
23
EBOOK•
Completed#drbharati
About
இளமைக் கால விளையாட்டுகள், பால்ய நண்பர்கள், சைக்கிள் பயணம், கோலிக் குண்டு, கிரிக்கெட் இப்படி நம் சிறுவயதைத் திரும்பிப் பார்க்கும் அன்பும் நெகிழ்வும் நிரம்பிய குறுநாவல் இது. நாவல் போட்டி ஒன்றில் முதல் பரிசு பெற்றது. கரிசல் இலக்கிய முன்னோடி கி. இராஜநாராயணன் அவர்களின் பாராட்டைப் பெற்ற நூல் இது. ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது
சேக்காளி
-அகிலாண்ட பாரதி
1.
உச்சிப் பொழுது என்பதால் சற்றே அதிகக் கூட்டமும் அந்த டவுன் பஸ்ஸில் நெரிசலை அதிகமாக்கிக் காட்டியது. வாசலுக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தான் வெங்கடாசலம். அப்போதுதான் ஒரு இடத்தைப் பிடித்து அவனுடைய பெட்டியை மேலே இருந்த கேரியரில் நுழைத்திருந்தான்.
துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி திருவனந்தபுரத்தில் வந்து இறங்கியதிலிருந்து மூன்று பேருந்துகள் மாறி வந்தாயிற்று. இல்லை நான்கா? நான்கரை மணி நேரப் பயணம். வழக்கமாக வருவதைப்போல டாக்ஸி வைத்துக்கொண்டு கூட வந்
...Loading...
Enjoyed this?
Sign in to clap