Skip to content
தூரத்து வெண்ணிலவே

தூரத்து வெண்ணிலவே

47
183
SERIES
CompletedNovella championship May 2026#love #family #society
Indhupraba
Indhupraba

About

திருமணமான பெண் குழந்தையின்மையால் படும் அவதிகள், கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலின் ஆழம் என்று அனைத்தையும் காதல் கலந்த குடும்ப கதையாக படைத்துள்ளேன்.. வாசித்து பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் நண்பர்களே..
அத்தியாயம் 1 குறிஞ்சி தெருவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் நின்று கொண்டு பால்கனியில் கை வைத்த வண்ணம் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெண்ணிலவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் திலீபன். அவனுடைய பத்து விரல்களும் இறுக்கமாக பால்கனி கம்பிகளை பற்றி கொண்டிருந்தது.. கண்கள் என்னவோ வெண்ணிலவை பார்த்த வண்ணம் நிலை குத்தி நின்றது.. எண்ணங்களை எங்கோ பாராசூட்டில் ஏற்றி பறக்க விட்டு விட்டு இவன் மரம் போல் நின்று கொண்டிருந்தான்.. பிரபல தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிகிறான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap