
கண்களில் என்ன தேடலோ
148
2.0k
SERIES•
Completed#YazhSathya#romcom
About
மேலதிக பட்டப் படிப்புக்காக பிரான்ஸில் உள்ள லியோன் நகரம் வரும் நாயகி அம்ருதா.. அவள் உண்மையில் பிரான்ஸ் வருவதற்கு காரணம் யாரையோ தேடி.. அவள் தேடல் வெற்றி பெற்றதா என்பதை கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி
2026 - 01 பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரின் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது அந்த விமானம். தன்னுடைய பயணப் பைகளை எடுத்துக் கொண்டு குடிவரவு, குடியகல்வு சட்ட திட்டங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வெளியே வரும் போது அத்தனை நேரம் இருந்த பயம் குறைந்துதானிருந்தது. ஆனாலும் படபடப்புக் குறைவதாக இல்லை. தன்னை அழைத்துச் செல்ல யாராவது வந்திருக்கிறார்களா என்று மெதுவாகக் கண்களைச் சுழற்றினாள் அம்ருதா . விமான நிலையத்திற்கே உரிய சனசந்தடியோடு இருந்த இடத்தில் அவளைத் தேடுவோர் யாரும் இல்லை. எங்கு பார்த்தாலும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap