
உயிரோடு விளையாடும் அழகியே
0
23
EBOOK•
Completed
About
எழுபது ஆண்டு காலக் காத்திருப்பு... தீராத ஒரு காதல் தாகம்... பழிவாங்கத் துடிக்கும் ஒரு ஆவி!"புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு குடும்பம், அங்கு மறைந்துள்ள இருண்ட ரகசியங்களை எதிர்கொள்கிறது. தன் காதலை அடைய துடிக்கும் தேவகன்னிகாவின் ஆவியிடமிருந்து, ஒரு மனைவிதன்கணவனையும்குடும்பத்தையும் எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே இந்த விறுவிறுப்பான நாவல்.
பயம், காதல், மற்றும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த இந்த அமானுஷ்யப் பயணம் உங்களை உறைய வைக்கும்!
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த சக்தியையும் வெல்லலாம்
அத்தியாயம் -1
"மம்மி அந்த வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"இன்னும் கொஞ்ச தூரம் தான் போகனும்.."
"டாடி எப்போ வருவாரு?"
"டாடி பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு.. அடுத்த வாரம் வந்துருவாரு.."
"நான் பின்னாடி பாட்டிக்கிட்டப் போய் உட்கார்ந்துக்குறேன்.."
"டேய் இஷான்.. பார்த்துடா.. இடிச்சுக்கப் போற.."
காரை செலுத்திக் கொண்டிருந்த ரக்ஷிதாவின் எச்சரிக்கையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் பின்சீட்டில் இருந்த தனது பாட்டி ராஜாத்தியிடம் தாவினான் ஐந்து வயதான இஷான்.
"டேய்.. எருமை.. பன்னி.. ஒரு இடத்துல உட்கார
Loading...
Enjoyed this?
Sign in to clap