
சில நேரங்களில் சில புரிதல்கள் : Sila Nerangalil Sila Puridhalgal
5
152
EBOOK•
Completed
About
ஒரு தவறான புரிதலால், நாயகியைப் பழி வாங்க அவளைத் திருமணம் செய்யும் நாயகன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு நடப்பது என்ன? நாயகி நாயகனை ஏற்றுக் கொள்வாளா? நாயகனின் தவறான புரிதலுக்கு காரணம் என்ன? அதற்குப் பிறகான அவர்களின் வாழ்க்கையை கதையோடு பயணித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே 😊
சில நேரங்களில் சில புரிதல்கள் அத்தியாயம் -1 அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டம் ஒரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது, அந்தக் காலை நேரத்தில். இனிமை நிறைந்த மேள இசையின் ஒலி கேட்பதற்குப் பதிலாக மனிதர்களின் பதட்டம் நிறைந்த குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அங்கு. வாத்தியக் கருவிகளை வைத்து அவ்வளவு நேரம் கண்களை மூடி ஒரு வித இரசிப்புடன் முழங்கிக் கொண்டிருந்த வாத்தியக்காரர்கள் அங்கு நடக்கும் களேபரத்தைக் கண்டு இசைப்பதை ஒவ்வொருவராக நிறுத்திக் கொண்டே வந்தனர். தொடர்ந்து வாசிக்கலாமா கூடாதா என்பது தெரியாமல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap