
மனதில் நின்றவள்
2
47
EBOOK•
Completed#love #romance #family
About
கடந்து போகும் மேகமல்ல நீ...
கண்முன்னே தேங்கி நிற்கும் நிலவு!
ஆயிரம் முகங்களை அன்றாடம் பார்த்தாலும்
அப்படியே நிற்கிறது - என்
அகக்கண்ணில் உன் முகம் மட்டுமே!
மறக்க நினைத்தாலும்
மறுக்க நினைத்தாலும்
மறையவில்லை உன் முகம்
மனதின் ஓரத்தில் மௌனமாய் அமர்ந்து
என் மௌனத்தையே இசையாக்குகிறாய்...
நீ - என்றும் என் மனதில் நின்றவள்
மனதில் நின்றவள் அழகான பொன்மாலைப் பொழுது தன் காதலனைத் துரத்திச் செல்லும் கடலலை,ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களும், சவுக்கு மரங்களும், மக்கள் அலைமோதும் கல்லடிக் கடற்கரையில் சுற்றி நடப்பதை மறந்து எங்கோ சிந்தனை வயப்பட்டவளாக இருந்தாள் நம் நாயகி சகஸ்தபானு. இருபத்தைந்து வயதுப் பாவை பொன்தேக நிறத்தவள், பிறை நிலா நெற்றி நீண்ட கார் கூந்தல் ,இலவம் பஞ்சான மென்மையான தேகம் மொத்தத்தில் கம்பரின் கவிதைக்கு இலக்கணமாய் விளங்கினாள், கயல்விழியின் முழு நிலவாய் ஒளிரும் முகத்திலோ சிந்தனை ரேகை அப்பிக் கிடக்க...
Loading...
Enjoyed this?
Sign in to clap