
உயிரினில் உனையே புதைத்தேன்
0
330
EBOOK•
Completed#AntiHero#ThulasiRaj#Romance
About
Anti Hero Story.
ஹீரோ அபயசிம்மன் ஒரு போலீஸ் ஆபீஸர். அவன் ஒரு கல்லூரி பெண்ணை பழி வாங்குவதற்காக மிரட்டி அவளது காதலை பிரித்து திருமணம் செய்து கொள்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்தான்? அதன் பின் என்னவானது? என்பது தான் மீதி கதை.
உயிரினில் உனையே புதைத்தேன்
துளசி ராஜ்
பகுதி 1
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா
என்ற பாடல் வீட்டில் ஒலிக்க, பூஜை அறையில் கற்பூரம் காட்டினார் சங்கர். அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர். மிகவும் கண்டிப்பானவர். சிறு தவறையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.
அவரருகே பக்தியுடன் கடவுளை வணங்கியபடி நின்று இருந்தாள் மாதவி. சங்கரின் மனைவி. கனிவான முகம், இனிமையானப் பேச்சு என மென்மையே வடிவானவர்.
சங்கர் கற்பூரத் தீப ஆராதனையை மனைவிக்குக் காட்ட, அவள் அதைத் தொட்டு வணங்கும் போது இன
...Loading...
Enjoyed this?
Sign in to clap