Skip to content
கடலோரக் கறை

கடலோரக் கறை

1
118
EBOOK
CompletedNovella championship May 2026#சமூகத்தின் சுவடு#திருச்செந்தூர் கோவில் கொள்ளை

About

திருச்செந்தூர் கோயில் வாசலில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக்கேட்கும் ஒரு சாதாரண இளைஞனின் போராட்டமே இந்தக் கதை. ஒரு மணி நேர அறப்போராட்டம் அவனது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது. அதிகார வர்க்கத்தால் கஞ்சா வியாபாரி எனப் பழிசுமத்தப்பட்டு, எட்டு மாதச் சிறைவாசம் அனுபவித்து, தன் காதலையும் கௌரவத்தையும் இழக்கிறான். இறுதியில், எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தன் தந்தைக்குத் துணையாக அதே கோயில் வாசலில் பூக்கடை வைத்து மௌனமாகத் தன் பிழைப்பைப் பார்க்கும் ஒரு சாமானியனின் வலியும் முதிர்ச்சியுமே இந்த கதை.
திருச்செந்தூர்.. விடியும் முன்பே விழித்துக் கொள்ளும் ஊர். அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் 'ஓம் சரவணபவ’ என்ற கோஷமும், கடலலையின் இரைச்சலும் போட்டி போட்டுக் கொண்டு ஊருக்குள் நுழையும். பன்னீர் இலை விபூதியின் வாசம் தெருக்களில் தவழ்ந்து கொண்டிருக்கும். செந்நிற வானம் மெல்லப் பிரியத் தொடங்க, பன்னீர்க் காவடியின் சத்தமும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற கோஷமும் காற்றில் மிதந்து வந்தன. சூரியன் கடலில் இருந்து மெல்ல தலைகாட்டும் அந்த விஸ்வரூப நேரத்தில், கோயிலின் ஒன்பது நிலை ராஜ கோபுரங்கள் வானத்தை முட்டி...
Loading...

Enjoyed this?

Sign in to clap