
உன் விழிகளில் என்னை தொலைத்தேனடி
1
10
SERIES•
Ongoing#Officeromance #Ceosecretary #Love #Revenge #Sibilingbond
About
சிறுவயதில் தன் தாய் செய்த துரோகத்தால் பெண்களையும், காதலையும் வெறுப்பவன் நம் கதையின் நாயகன் வருண்…
தன்னை நேசிக்கும் குடும்பத்தின் மீது அன்பைப் பொழியும் நாயகி மகிரா பர்சனல் செகரட்டரியாக அவன் வாழ்க்கையில் நுழைகிறாள்..
முதல் நாளிலிருந்தே ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு, அவள் மேல் அவனுக்கு!! ஈர்ப்பு காதலாக மாறி தன் காதலை அவளிடம் வெளிப்படுத்த நினைக்கும் போது எதிர்பாராத பிரச்சனைகள் சூறாவளியாக சுழன்று அடிக்கிறது..
சந்தர்ப்பவசத்தால் தான் நேசிக்கும் வருணுக்கு துரோகம் செய்யும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறாள்..
பரபரப்பான காலை பொழுது.. பீக் ஹவர் என்பதால் மக்கள் கூட்டம் சாலையில் அலை மோதிக் கொண்டிருக்க கார், மோட்டார் பைக், பஸ் என அனைத்திலிருந்தும் ஒலிக்கும் ஹாரன் சப்தங்கள் ஒலி மாசை ஏற்படுத்திக் கொண்டிருந்தன... சாலையில் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறும் வரை காத்திருக்க முடியாமல் வாகனங்கள் அனைத்தும் பொறுமையின்றி உறுமிக் கொண்டிருந்தன... நேரம் செல்ல செல்ல சாலையில் வாகன நெரிசல் அதிகமாக கார், பைக், பஸ் என அனைத்தும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன.. ஒரு சிறு இடைவெளி...
Loading...
Enjoyed this?
Sign in to clap