
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
213
5.4k
SERIES•
Completed#YazhSathya#romcom
About
இலங்கையில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் நாயகி...!
அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அவற்றிற்குத் தீர்வாயும் மேலும் தொல்லையாயும் கிடைக்கும் ஒரு காதல்...!
இதுவரையில் நீங்கள் கதைகளில் வாசித்திராத ஒரு வேறுபட்ட கதாநாயகன்…!
கதையின் நாயகி அனைத்துப் பிரச்சினைகளையும் எப்படி வென்றெடுத்துத் தன் பாலைவனமாய் இருந்த வாழ்க்கையைப் பசுஞ்சோலை ஆக்கினாள் என்பது தான் கதை.
யாரைக் காண்பதற்கு யார் கண்கள் கொண்டனர் எனத் தெளிவுறத் தெரியக் கதையை வாசியுங்கள்
அத்தியாயம் - 01
பிரான்ஸ் நாட்டிலிருக்கும் அழகான மலைகள் சூழ்ந்த நகரமான Grenoble அந்தக் காலை நேரத்துக்கே உரிய ஆரவாரத்தோடு விளங்கியது.
அவசரம் அவசரமாக தான் ஏற வேண்டிய ட்ராமைப் பிடிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள் ஷானவி. ட்ராம் நிறுத்தத்தில் மூச்சு வாங்க வந்து நின்றபடி அங்கிருந்த நேர அட்டவணை டிஜிட்டல் திரையில் நேரத்தைப் பார்த்தவள், அது காலை எட்டு இருபதைக் காட்டுவதை எண்ணி சிறிதே மனச் சுணக்கமடைந்தவாறு தான் வர வேண்டிய ட்ராம் ஏ வர இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதைப் பார்வையிட்டாள். இன்னும் இரண்டு ந
...Loading...
Enjoyed this?
Sign in to clap