Skip to content
காதல் ஒரு சங்கீதம்

காதல் ஒரு சங்கீதம்

30
753
SERIES•
Completed#Lovestory#Tamilnovel#Familynovel
RADHA KUMAR
RADHA KUMAR

About

தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவைப் போல பாசம் காட்டும் அக்கா கணவன். பருவக்கோளாறால் வாழ்வைத் தொலைத்து விட்ட சகோதரி. மகன் சொல்லே வேத மந்திரம் என வாழும் அன்னை. மகனை எதிர்க்க இயலாமல் உணர்வுப் போராட்டத்தில் தவிக்கும் தந்தை. இத்தனைக்கும் இடையில் அவள் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மருந்தாக வந்த நாயகன். சூழ்நிலையால் அவனை ஏற்க முடியாமல் தத்தளிக்கும் நாயகி. தன் காதல் கைகூடும் என நம்பிக்கையில் வாழும் நாயகன். நட்புக்காக எதையும் செய்ய துணியும் நண்பர்கள். இவங்களைச் சுற்றிதான் கதை சுழலப்போகிறது.
“ வே தா! ரெடி ஆயாச்சா? இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பினாதான் நைட் எட்டு மணிக்குள்ள சேலம் போய் ரீச் ஆக முடியும்.” பேசிக்கொண்டே அறைக்குள் வந்தான் வேதாவின் கணவன் முரளி. எடுத்து வைத்த லக்கேஜ்களை சரி பார்த்தபடியே, “ரெடிதாங்க. அபி குட்டி வந்துட்டாளா?” எனக் கேட்டாள். அபி முரளி வேதாவின் செல்ல மகள். “அபி இன்னும் வரலைமா. பக்கத்து ஆத்துலதான் இருக்கா. நம்ம ரெண்டு பேரும் கிளம்பற வரை தன்யா கூட விளையாடிண்டு இருக்கேன்னு சொன்னா. நீ எல்லா லக்கேஜும் எடுத்து வெச்சிட்டியா? அப்புறம் அங்க போய்ட்டு அதை மறந்துட்டேன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap